jambuvaan
jambuvaan.blogspot.com
Saturday, April 30, 2011
Saturday, February 19, 2011
NALLA NANBARGAL
என் மனதோடு மீண்டும் கை குலுக்க வந்த இனிய நெஞ்சங்களுக்கு ஜாம்புவானோடை சத்திய மூர்த்தியின் வணக்கங்கள். சிங்கைக்கு வந்து 16 ஆண்டுகளில் சந்தித்த நல்ல நண்பர்களில் முக்கியமானவர்கள் இரண்டு ரமேஷ்கள். ஒருவர் நவநீதம் ரமேஷ் மற்றொருவர் தியாக ரமேஷ். இருவரில் இவ்வாரம் தியாக ரமேஷ் பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்வதிலும் பகர்வதிலும் ஒரு திருப்தி. இவர் தமிழ் நிகழ்வுகளில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனவர், நெடிய ஆனால் இனிய உருவம் என்றும் நெற்றியில் ஒரு சிறிய சந்தனபொட்டு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லாமல் நேராக நிகழ்வுக்கு வந்ததை சொல்லாமல் சொல்லும் தோள் பை.பார்த்தவுடன் வணக்கம் அண்ணா என்று நம்மையும் அறிஞர் போல் எண்ணி காட்டும் நேசமும் சிநேகமும் கலந்த சிநேக புன்னகை உரையாடும் போது தன் குடும்ப உறுப்பினர்களைப்பற்றி கூறி உறவாடும் நேசம் நிகழ்ச்சிகளில் நடக்கும் காட்சிகளை தன் மெல்லிய DIGICAM ல் பதிவாக்கி இணைப்புறையோடு படமாக்கி மறுநாளே உலகெங்குமுள்ள இணைய நண்பர்களுக்கு கண்களுக்கு விருந்தாக்கும் வேகம் அதற்க்கும் மேலாக அவற்றை ஊடகங்களுக்கு அவை கேட்காமலேயே அனுப்பி வைத்து நெகிழ்வுறும் மகிழ்வு விழாக்கள் முடிந்து செல்லும்போது பிரிய மனமின்றி இன்னும் ஒரு வாரம் சந்திக்க முடியாது என்று கூறி பாசிர் ரிஸ் MRT ல் அனுப்பிவிட்டு பூன்லே போகும் குழந்தைமனம் இடைப்பட்ட ஆறு நாட்களுக்குள் அவரின் இணைய நண்பர்கள் அனுப்பும் சுவை தகவல்கள் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைக்கும் பரிவு என்று எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. அத்தகு இனிய நட்புத்தம்பி பெயரில் உள்ளதைப்போலவே மனதாலும் தியாக சிந்தை உள்ள தியாக ரமேஷ் இன்று எனக்கு அனுப்பியுள்ள மனதைதொட்ட வரிகளை உரிமையோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி
நன்றியுடன் பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி
ந,வீ,சத்தியமூர்த்தி
Saturday, February 12, 2011
anbar dhinam
அனைவருக்கும் எனது இனிய அன்பர் தின வாழ்த்துக்கள்
*****************************************************************
திரைப்படக் காதலை கரவொலி எழுப்பி
சிறப்பென உரைப்பவர் வீட்டில்-காதல்
சிறைபடக் காண்கிறோம் நாட்டில்!
கரைபடா அன்பினால் காதலில் வசப்படும்
காதலர் இணைந்திடச் செய்வோம்-உண்மைக்
காதலால் இல்லறம் செய்வோம்!
அறிவியல் உலகினில் அறிவொடு அன்பையும்
ஆதியுள் மனிதனாய்ப் பகிர்வோம்-மனம்
அகலத் திறந்து உயர்வோம்!
நெறிஎனப் பண்பென நேற்று நம் முந்தையர்
நீதியாய்த் தந்தனக் காப்போம்-அதற்கு
நேசமாய்க் கரங்களைச் சேர்ப்போம்!
மானுடம் வாழவே அன்பினை அன்றியோர்
மந்திரம் இலைஎனச் சொல்வோம்-அது
மனங்களை இணைக்கிறச் செல்வம்!
வீணுடல் அழியுமுன் அன்பினால் உலகினை
விளங்கிடத் துலங்கிட வைப்போம்-அன்பினால்
விலகிய இதயங்கள் தைப்போம்!
*****************************************************************
திரைப்படக் காதலை கரவொலி எழுப்பி
சிறப்பென உரைப்பவர் வீட்டில்-காதல்
சிறைபடக் காண்கிறோம் நாட்டில்!
கரைபடா அன்பினால் காதலில் வசப்படும்
காதலர் இணைந்திடச் செய்வோம்-உண்மைக்
காதலால் இல்லறம் செய்வோம்!
அறிவியல் உலகினில் அறிவொடு அன்பையும்
ஆதியுள் மனிதனாய்ப் பகிர்வோம்-மனம்
அகலத் திறந்து உயர்வோம்!
நெறிஎனப் பண்பென நேற்று நம் முந்தையர்
நீதியாய்த் தந்தனக் காப்போம்-அதற்கு
நேசமாய்க் கரங்களைச் சேர்ப்போம்!
மானுடம் வாழவே அன்பினை அன்றியோர்
மந்திரம் இலைஎனச் சொல்வோம்-அது
மனங்களை இணைக்கிறச் செல்வம்!
வீணுடல் அழியுமுன் அன்பினால் உலகினை
விளங்கிடத் துலங்கிட வைப்போம்-அன்பினால்
விலகிய இதயங்கள் தைப்போம்!
....எண்ணங்கள்
கண்ணதாசன் பதில்கள்: என் குரு யார்?
2
பதில்: வழக்குச் சொற்களைத் தள்ளிவிடுவதால்தான் மொழி வளம் குறைகிறது. உலகத்தை ஆங்கிலம் ஆக்கிரமித்துக்கொண்டது, வட்டாடர வழக்குகளை ஏற்றுக்கொண்டதாலேயே.
கே: 'கண்ணதாசன்' இதழில் 'அரிதாரமே இறைவன் படைத்த உண்மை. அழகாக முடியுமானால், நடிகன் நாட்டுத் தலைவனாவதும் நடக்கக்கூடியதே' என்று எழுதியிருந்தீர்களே? நடிகர்களான எம்.ஜி. எம்.ஜி.ஆரும், ரீகனும் நாட்டுத் தலைவர்களாகி நாடாளுகிரார்களே...உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டீர்களா?
பதில்:உண்மைதான். காலத்தால் எவ்வள்ளவோ கருத்துக்கள் மாறி விடுகின்றன. அனுபவங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது மடத்தனம். அனுபவம் என் கருத்தைப் பொய்யாக்கிவிட்டது என்பதைக் கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.
கே : நீங்கள் குறுகிய நேரத்தில் எழுதிய பாடல் எது?
பதில்: 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வரும் 'முத்தான முத்தல்லவோ '
கே: அரசன் அன்று கொள்வான், அதனால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் தெய்வம் நின்று கொல்லும். அதனால் பிரச்சனை பெரிதாக உருவாகிவிடுமல்லவா?
பதில்: பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும்.சந்தேகமே இல்லை. நோயை முற்ற விட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு அந்த 'நோய்' வரவே வராது.
கே: பெண் - கவிதை இரண்டையும் ஒப்பிடுங்கள்?
பதில்: பெண் எப்போதும் அனுபவிக்கத் தக்கவள். கவிதை ஓய்விருக்கும் போது மட்டுமே.
கே: 'காமதாசன்' என்ற பட்டப்பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்றிருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: இடையில் 'ராஜ' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'காமம்' என்றால் அன்பும் என்றொரு பொருளும் உண்டு.
பதில்: பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும்.சந்தேகமே இல்லை. நோயை முற்ற விட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு அந்த 'நோய்' வரவே வராது.
கே: பெண் - கவிதை இரண்டையும் ஒப்பிடுங்கள்?
பதில்: பெண் எப்போதும் அனுபவிக்கத் தக்கவள். கவிதை ஓய்விருக்கும் போது மட்டுமே.
கே: 'காமதாசன்' என்ற பட்டப்பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்றிருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: இடையில் 'ராஜ' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'காமம்' என்றால் அன்பும் என்றொரு பொருளும் உண்டு.
கே: பிறர் இயற்றிய பாடல்களில் உங்களைக் கவர்ந்த பாடல்?
பதில்: சகுந்தலையில் வரும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடலான 'சொல்லு குழாந்தாய்' என்ற பாடல்.
கே: இவ்வளவு காலம் அரசியலில் மாட்டித் தவித்தீர்கள். இரண்டு வரிகளில் அந்த அனுபவத்தை படம் பிடியுங்களேன்?
பதில் : அரசியல் எனது உருவத்தை சிதைத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் என் சுயசரிதையின் பக்கங்களை அதிகரித்திருக்கிறது.
கே: கவிஞன் வாக்கு பொய்க்காது என்னும் கூற்று பற்றித் தங்கள் கருத்து யாது? தங்கள் வாக்கு எத்தன்மையது?
பதில்: மனப்பூர்வமாக, லாபம் கருதாது, தோன்றுகின்ற உணர்ச்சியை அப்படியே வடித்து வைக்கும் யாருடைய நேர்மையான வாக்கும் பொய்க்கவே பொய்க்காது.
கே: தங்களின் குரு யார்?
பதில்: நான் செய்த முட்டாள்தனமே!
Subscribe to:
Posts (Atom)